in

காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான இயக்கமில்லை என்று மூன்றாவது முறை சொல்லி முடிப்பதற்குள் தலையில் விழுந்த இரும்பு ராடு சரிந்த சசிதரூர்.


காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான இயக்கமில்லை என்று மூன்றாவது முறை சொல்லி முடிப்பதற்குள் தலையில் விழுந்த இரும்பு ராடு சரிந்த சசிதரூர்.

திருவனந்தபுரம்.,

கோவிலில் காங்கிரஸ் வெற்றிபெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டிருந்த போது தலையில் இரும்புகள் விழுந்து முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசிதரூர் படுகாயம்.

திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள காந்தாரியம்மன் கோவிலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சியமைக்க வேண்டி துலாபாரம் என்னும் சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டார் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் சசி தரூர்.

அதாவது பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் காங்கிரஸ் இந்துக்களுக்கு எதிரான இயக்கம் என்று கேரளா மக்களிடத்தில் பிரச்சாரம் செய்துவருவதாகவும், அதனை பொய்யாகும் வகையில் அனைத்து கோவிலுக்கும் சென்று கடவுளின் ஆசி பெற்று எந்த மதத்திற்கும் எதிரான இயக்கம் காங்கிரஸ் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக சசிதரூர் கோவிலுக்கு சென்றிருந்தார்.

அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ஒருசேர்ந்து முன்றாவது முறை சொல்லி முடிப்பதற்குள்,

மேலிருந்த இரும்புகள் கழண்டு வந்து நேராக சசிதரூரின் மண்டையில் விழுந்தது அப்போது அந்த இடத்திலேயே சசிதரூர் மயங்கி சரிந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர் அவருக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அங்கிருந்த கோவில் குருக்கள் இதுபற்றி கூறும்போது இதுவரை இப்படி நடந்ததில்லை என்று இருக்கலாம் தெரிவித்தனர்.