in

தீவிரவாதியை கவுரவப்படுத்திய ராகுலே உள்ளே வராதே விரட்டி அடிக்கும் தமிழர்கள் இப்போ தெரியுதா திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைமை இதுதான் போட்டுடைத்த ஊடகம் !


தீவிரவாதியை கவுரவப்படுத்திய ராகுலே உள்ளே வராதே விரட்டி அடிக்கும் தமிழர்கள் இப்போ தெரியுதா திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைமை இதுதான் போட்டுடைத்த ஊடகம்

சென்னை

திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வரும் ராகுல் காந்திக்கு ஆரம்பமே கடும் சறுக்கலை கொடுத்துள்ளது. குறிப்பாக தமிழகம் வரும் மோடிக்கு எப்படி சமூகவலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியதோ அதை விட ஒருபடி அதிகமாக ராகுலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக ஆட்சியில் இருக்கும் பாஜகவிற்கு எதிர்ப்பு கிளம்பினால் நியாயம் உண்டு ஆனால் எதிர் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணியில் உள்ள திமுக ஆட்சியில் அமர்ந்து 8 வருசம் ஆச்சு ஆனால் இன்றும் எதிர்ப்பு இருப்பது தமிழக மக்கள் இவர்களை விரும்பவில்லை என்றும்..,

இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது தொடர்ந்து இந்து மதம் அடையாளங்களுக்கு எதிரான திமுக, காங்கிரஸ் நிலைப்பாடு. ராணுவத்தினரின் நடவடிக்கையை சந்தேகப்பட்டது மட்டுமல்லாமல் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழப்பிற்கு காரணமான தீவிரவாதி மசூர் அசாத்தை அண்ணன் என்று ராகுல் அழைத்தது.

திமுக ஆட்சியில் இருந்த ஊழல், கட்டப்பஞ்சாயத்து, மின்சார இழப்பு ஆகியவை சொல்லப்படுகிறது இருந்தாலும் இவை அனைத்தையும் விட இலங்கை தமிழர்கள் படுகொலையில் தொடர்புடைய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் வருவதா என்றே பலரும் தங்கள் கருத்தை ஆழமாக பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

தமிழகத்தை சேர்ந்த ஊடகங்கள் மட்டுமே மீண்டும் தமிழர்கள் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு அளிப்பார்கள் என்று சொல்லிவருவதாகவும் ஆனால் ஒருகாலமும் தமிழர்கள் அதனை ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றும் நிச்சயம் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்பது என்பது இயலாத காரியம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

தொடர்ந்து தமிழர்கள் தங்கள் ஆதங்கத்தை ட்விட்டரின் வாயிலாக #GOBACKRAHUL என்ற ஹாஷ்டாக் மூலம் சொல்லி வருகிறார்கள்.

©TNNEWS24