in

ராகுல் இது எங்க ஏரியா உள்ள வராதே ! ஒன்று சேர்ந்து அடித்து விரட்டிய பாஜக அதிமுக பாமக தேமுதிக தொண்டர்கள் இது தான் இப்போ ட்ரெண்ட் !


பணம் கொடுத்து திமுக காங்கிரஸ் செய்த வேலை ஒன்று சேர்ந்து அடித்து விரட்டிய பாஜக அதிமுக பாமக தேமுதிக தொண்டர்கள் இது தான் இப்போ ட்ரெண்ட் #GOBACKRAHUL

சென்னை

திமுக காங்கிரஸ் கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று வருகைதர இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்.

இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மற்றும் தமிழ் ஆதரவாளர்கள் இணைந்து இப்போதே ட்விட்டர் சமூகவலைத்தளத்தில் #GOBACKRAHUL என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய வருகின்றனர்.

ஆனால் எப்படியும் தமிழகம் வரும் ராகுல் காந்திக்கு தமிழர்கள் இடையே எதிர்ப்பு இருக்கும் என்றும், மோடி போல் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் எதிர்ப்பு கிளம்பினால் சமாளிக்க முடியாது என்று அறிந்த திமுக ஐ டி விங் இன்று paid ட்வீட் அதாவது ட்விட்டருக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்தி #GOBACKSADISTMODI என்ற ஹாஸ் டேக்கை ட்ரெண்ட் செய்துவருகிறது.

ஆனால் ஒட்டுமொத்த தமிழர்களும் சேர்ந்து அடித்த அடியில் #GOBACKRAHUL என்ற ஹாஷ்டாக் மட்டுமே தற்போது சென்னை அளவில் முதலிடத்தில் உள்ளது இந்திய அளவில் 5 வது இடத்திலும் உள்ளது இன்னும் சிறிது நேரத்தில் இந்திய அளவிலும் அதனை அடுத்து உலக அளவிலும் இடம் பெரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மோடி தமிழகம் வந்தபோது அவரை வரவேற்று பாஜகவினர் #TNWELCOMESMODI என்ற ஹாஷ்டாக் பயன்படுத்தினார்கள் ஆனால் பாவம் ராகுலை வரவேற்க ஆளே இல்லையா இல்லை இதுதான் காங்கிரஸ் கூட்டணியின் நிலைமையா என பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.

©TNNEWS24