in

வீடியோ வெளியானதால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி இப்போ உங்களுக்கு சந்தோசமா பெண்ணின் உறவினர்கள் வேதனை !


வீடியோ வெளியானதால் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சி இப்போ உங்களுக்கு சந்தோசமா பெண்ணின் உறவினர்கள் வேதனை !

பொள்ளாச்சி

இணையத்தில் தனது வீடியோ வெளியான நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் பெண்களுக்கு நடத்தப்பட்ட கொடூரம் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது அளவிற்கு பல பாதிப்புகளை மக்கள் மனதில் ஏற்படுத்தி சென்றுள்ளது, இதில் இருந்து குற்றத்தில் ஈடுபட்ட ஒருவரும் தண்டிக்கப்பட கூடாது என்பதில் அனைவரும் உறுதியாக உள்ளனர்.

ஆனால் சிலர் தங்கள் அரசியல் சுய லாபத்திற்காக பெண்ணின் அந்தரங்க விடீயோவினை வெளியிட்டு பாதிக்கப்பட்ட பெண்ணினை அடையாள படுத்திவிட்டனர். அதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அந்த பெண்ணின் வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாக பரவவே இன்று அந்த பெண்ணின் வாழ்க்கை நிர்கதியில் நிற்கிறது.

பாதிக்கப்பட்ட பெண் நேற்று ஒரு ஆடியோவினை வெளியிட்டிருந்தார் அதில் தனது வழக்கினை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்ததுடன் குற்றவாளிகளை தண்டிப்பதில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த சூழலில் என்னை போல் யாரும் இந்த கும்பலிடம் சிக்கி சீரழிய கூடாது என்பதற்காக மட்டுமே நான் வழக்கு தொடர்ந்திருந்தேன் ஆனால் இன்று என்னை பற்றிய முழு விவரத்தையும் வெளியிட்டு எங்கள் குடும்பத்தை அடையாள படுத்தியதுடன் எனது விடீயோவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நிர்கதி ஆக்கிவிட்டார்கள்.

என்ற காரணத்தால் பாதிக்கப்பட்ட பொள்ளாச்சியை சேர்ந்த பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், அவர்களின் குடும்பமே மொத்தத்தில் அதே நிலையில் இருப்பதாகவும். வீடியோ வெளியிட்டவர்களை தொடர்பு கொண்டு இப்போ சந்தோசமா உங்கள் மகளாக இருந்தால் இப்படித்தான் செய்வீர்களா என்று வேதனையுடன் தெரிவித்ததாக ஆங்கில ஊடகமான #OPINDIA செய்தி வெளியிட்டுள்ளது.

©TNNEWS24