in

வெளியானது உண்மை நேற்று ராகுல் பங்கேற்ற கல்லூரி நிகழ்ச்சியில் நடந்தது என்ன கல்லூரியில் பயிலும் மாணவியின் தந்தை விளக்கம் .


தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இது ராகுலுக்கு நட்சத்திர அந்தஸ்தை பெற்றுத்தரும் என்று காங்கிரஸ் எதிர்பார்த்த நிலையில் , கிருஸ்துவ கல்லூரிக்கு ராகுல் சென்றதும் , அங்குள்ள கிருஸ்துவ மத போதகர்களுடன் அவர் கலந்துரையாடுவதும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களை பெற்றுள்ளது.

ராகுல் சென்றது தேர்தல் பிரச்சாரத்திற்கா இல்லை ஜெபக்கூட்டத்திற்கா என்றும் , இதுவே வட இந்தியாவாக இருந்தால் ராகுல் கோவில்களுக்கும் , இந்து மடங்களுக்கும் சென்றிருப்பார் தமிழகம் என்பதால் கிறிஸ்துவ கல்லூரிக்கு சென்றுள்ளார் என்றும்,

அவர் இத்தாலிய ரத்தம் என்பதை உணர்த்திவிட்டார் என்றும் பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்துவரும் நிலையில் ராகுல் பங்கேற்று பேசிய ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியின் தந்தையான அய்யாச்சாமி என்பவர்

தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் தனது மகளும் அதே கல்லூரியில் தான் படிக்கிறார் அவளும் ராகுலின் நிகழ்ச்சியில் பங்கேற்றார்

ஆனால் என் மகளுக்கு ராகுலிடம் கேள்விகேற்க அனுமதியில்லை , அங்கு படிக்கும் மாணவிகளில் குறிப்பிட்ட சில மாணவிகளை தேர்ந்தெடுத்து அவர்களிடம் கேள்விகள் வழங்கப்பட்டது

அவர்கள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்பட்ட கேள்வியை கேற்க வேண்டும் , வேறு எந்த கேள்வியையும் கேற்க கூடாது
மற்ற மாணவிகளிடம் ராகுல் காந்தி உங்களிடம் கேள்விகளை கேளுங்கள் என்று கேட்பார்,

ஆனால் நீங்கள் யாரும் மைக்கை வாங்க கூடாது தேர்வு செய்யப்பட்ட மாணவிகள் மட்டுமே கேள்விகளை கேட்பார்கள் என்று கூறியுள்ளனர்.

இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது ராகுலுக்கு இல்லாத ஒரு நட்சத்திர அந்தஸ்தை உருவாக்க காங்கிரஸ் தலைமை தீவிரமாக உழைத்து வருகிறது.

©TNNEWS24